சரி வாங்க பார்க்கலாம் மகிழ்ச்சிக்கான 10 வழிகளை
உங்களைப் பற்றி யோசியுங்கள்
நம் வாழ்க்கையில் நம்மளைப் பற்றி என்றாவது ஒருநாள் யோசித்தது உண்டா? நம் வாழ்க்கையில் நாம் எவ்வளவு நல்லது செய்து இருக்கிறோம். எத்தனை பேருக்கு உதவி செய்து இருக்கிறோம். நம்மால் என்ன செய்ய முடிந்தது. என்ன செய்ய முடியவில்லை. நம்மால் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. எத்தனை பேரை மகிழ்ச்சியாக வைத்துள்ளோம். என்பதைப் பற்றி சிறிது நேரம் யோசியுங்கள்.
உங்களைப் பற்றி யோசித்து மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். முதலில் உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்
முடிந்தவரை அனைவரையும் மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் மணிக்கும் பொழுது ஒரு மரியாதையும் மகிழ்ச்சியும் உங்கள் கூடவே இருக்கும்.
நன்றாக தூங்க வேண்டும் மற்றும் தியானம் செய்ய வேண்டும்
நம் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று தூங்க வேண்டும். நீங்கள் தூங்கும் போது தான் உங்கள் மனமும் உடலும் அமைதியாக இருக்கும். அப்போதுதான் நாம் நன்றாக யோசித்து செயல்பட முடியும். அதே போல் தியானமும் மன அமைதிக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது எனவே காலையில் எழுந்தவுடன் தியானம் செய்யுங்கள்.
மகிழ்ச்சியான சூழலை உருவாக்குங்கள்
முடிந்தவரை மகிழ்ச்சியாக இருக்கும் இடத்தில் உங்கள் நேரத்தை செலவழியுங்கள். மகிழ்ச்சியான சூழலை உங்களை சுற்றி உருவாக்குங்கள். உன் வாழ்க்கையில் மனிதர்களிடம் பேசுவது குறைந்து கொண்டே வருகிறது. அது உங்களை சோகங்களை வைத்திருக்க காரணமாக அமைகிறது.
நீங்கள் உங்கள் வாழ்க்கையின் சில நேரத்தை மகிழ்ச்சியாக குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் மனம் அமைதியாகும் மற்றும் தன்னம்பிக்கையுடனும் இருக்கும்.
அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்
உங்களை நேசிப்பவர்களையும் நீங்கள் நேசிப்பவர்களை என்றைக்கும் கைவிடாதீர்கள். மனிதர்கள் மீது அன்பை செலுத்துங்கள். வெறுப்புகள் வீன் கோபங்கள் போன்றவைகளை தவிர்க்கவும். அன்பு காசா பணமா அதிகமாக செலுத்துங்கள்.
நன்றி சொல்லுங்கள்
உங்களுக்கு நன்றி சொல்லுங்கள். உங்களைப் பெற்றவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் உலகத்துக்கு நன்றி சொல்லுங்கள். இயற்கைக்கு நன்றி சொல்லுங்கள். அதுபோல மனிதர்களுக்கும் நன்றி சொல்லுங்கள் நன்றி சொல்லும் மனப்பான்மை இருந்தால் உங்கள் மனம் அமைதியாகவும் அதிகளவு கற்றுகொள்ளும் திறனையும் மேம்படுத்தும்.
தேவையற்ற பிரச்சனைகள் வருவதைத் தடுக்கும். இதனால் மகிழ்ச்சியாக இருக்க இதுவும் ஒரு காரணமாக அமைகிறது.
செய்வதே திருந்தச் செய்
நாம் எந்தஒரு விஷயம் செய்யவேண்டும் என்றாலும் அதை திருந்தசெய்யவேண்டும்.
எந்தஒரு நல்லவிஷயத்தையும் தள்ளிப்போடாதீர்கள். நீங்கள் ஒரு செயல் செய்யநினைத்தால் அது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை என்றால், அதை உடனே செய்து முடித்துவிடுங்கள். இன்றைக்கு செய்யலாம் அல்லது நாளைக்கு செய்யலாம் என்று யோசிக்காதீர்கள். ஏனென்றால் அது உங்களுக்கு, மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். காலம் பொன் போன்றது நமக்கான நேரத்தை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள்
மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவது உங்களையும், உங்களைச் சுற்றி மகிழ்ச்சியாக வைத்திருக்கும். மன அமைதிக்கும், நேர்மறையான எண்ணங்களையும், அதிகம் கற்றுக் கொள்ளும் பழக்கத்தையும், உங்களுக்கு அது சொல்லிக் கொடுக்கும். எனவே சுற்றியிருப்பவர்கள் மகிழ்ச்சியாக வைக்க முயற்சி செய்யுங்கள். நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள்.
வாய்ப்புகளை வீணாக்காதீர்கள்
உங்களுக்கான வாய்ப்பை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாய்ப்பு என்பது அனைவருக்கும் கிடைக்கும் ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். எனவே வாய்ப்புகளை இனி தவறவிடாதீர்கள். வாய்ப்புக்காக காத்திருக்காதே வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
தடைகளை எதிர்கொள்
நம் வாழ்க்கையில் எந்தவித தடைகளும் வந்தாலும் அதை எதிர்கொள்ள போராடுங்கள். உங்கள் மனதை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்திற்கும் பயப்படாதீர்கள்.துணிந்து செயல்படுங்கள் மற்றவர்களுக்கு உதவுங்கள்.How to happy in life | 10 tips to be happy | Tamil
(எனவே மகிழ்ச்சியாக இருப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. அனைவரையும் சிரிக்க வைத்து சிந்திக்க வைப்போம் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வோம் நன்றி !!!)