Interesting facts Tamil
நமக்கு நாமே கிச்சு கிச்சு மூட்டினால் சிரிப்பு வருமா?
வராது என்பதுதான் உண்மை. ஏன்?
நமக்குப் பிறர் கிச்சு கிச்சு மூட்டினால் சிரிப்பு வருவது ஒரு அனிச்சை செயல் என்பதால் சிரிப்பு வருகிறது. நமக்கு நாமே கிச்சு கிச்சு மூட்டி கொள்ளும் பொழுது நம் மூளைக்கு முன்கூட்டியே தெரிந்து விடுகிறது. அதனால் நமக்கு அந்த அனிச்சை செயல் தெரிவதில்லை. அதனால் இங்கு அனிச்சை செயல் நிகழ்வது இல்லை.