Iron rain in WASP-76B planet in Tamil
பொதுவாக விண்வெளியில் பல அதிசயங்கள் நடைபெறும். அதை விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டே
வருகின்றன. அப்படி சோதனையைக் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் அதிசயமான கோள் தான் இது.
வாஸ்ப் 76பி என்று கண்டறியப்பட்ட இந்த கோள் அதனுடைய நட்சத்திரத்தை சுற்றி
வரும்பொழுது பகல் நேரத்தில் அதனுடைய வெப்பநிலை 2400 டிகிரி செல்சியஸ் ஆக
இருக்கிறது. இந்த வெப்ப நிலையால் உலகங்களை ஆவியாகும் தன்மை கொண்டது. இரவு
நேரங்களில் இந்த வெப்பநிலை 1400 டிகிரி ஆக குறைந்து விடுகிறது. இந்த
வெப்பநிலையால் பகல் நேரத்தில் ஆவியான உலோகங்கள் இறுகி மழையாகப் பொழிகிறது.
இப்படித்தான் அங்கு இரும்பு மழை பெய்கிறது.
இது ஒரு வினோதமான சூழல் என்று ஜெனிவாவைச் சேர்ந்த டாக்டர் டேவிட் ஹாரோயின்
விளக்கம் கொடுத்துள்ளார்.வியாழனை விட 76பி இரண்டு மடங்கு பெரிய கோள். உண்மையாக
இந்த கோளில் நிலவும் அதிக வெப்பத் தன்மையால் மேகங்கள் இங்கு
காணப்படுவதில்லை.இங்கு நிலவும் வெப்ப நிலை மாற்றங்களால் மணிக்கு 18 ஆயிரம் கிலோ
மீட்டர் வேகத்தில் கடுமையான காற்று வீசும் என டாக்டர் டேவிட் ஹெரோயின்
கூறியுள்ளார்.