முட்டைக்குள் எப்படி சுவாசம் நடைபெறுகிறது? என்ற கேள்வி சிறியவர் முதல் பெரியவர்
வரை அனைவருக்கும் கேட்கும் கேள்வியாக இருக்கிறது. ஆம், வாங்க அது எப்படி என்று
பார்ப்போம்.
முட்டைக்குள் எப்படி சுவாசம் நடைபெறுகிறது?
முட்டையின் உள்ள கோழிகுஞ்சு மூக்கினால் காற்றை சுவாசிப்பது கிடையாது. அதற்கு
பதில் அங்கு முட்டையின் ஒரு முனையில் கொஞ்சம் காற்று சிறிய அறையில்
சேமிக்கப்பட்டிருக்கும்.
அதாவது முட்டையின் உள் மேற்பரப்பில் ஒரு வெள்ளைத் தோல் போல் சுற்றி இருக்கும்.
நாம் அனைவரும் பார்த்திருப்போம், அது கோழி முட்டை இடும் பொழுது சூடாக
இருப்பதால் அது முட்டை ஓட்டில் இருந்து பிரிந்து வராமல் ஒட்டியிருக்கும்.
முட்டை சிறிது நேரத்தில் குளிர்ந்த பிறகு அது தன் தன்மையை இழந்து சுருங்கி
வரும் பொழுது அங்கு முட்டையின் மேலே ஒரு சிறிய காற்று அறை போல்
உருவாகும்.
இந்த காற்று அறையை நம் முட்டை அவிக்கும் பொழுது முட்டையின் மேற்பரப்பில் ஒரு
சிறிய இடைவேளை இருக்கும். அதை நாம் கவனித்து இருப்போம்.
அங்கு உள்ள காற்றை இரத்தக்குழாய்கள் பயன்படுத்திக் வளரும் கரு அல்லது உள்
வளரும் கோழிகுஞ்சிகள் தேவையான காற்றை எடுத்து கொள்கின்றன.
எப்படி காற்று வெளியேறுகிறது?
அந்த காற்றுப் பையில் உள்ள ஆக்ஸிஜனை சுவாசித்து கார்பன் டை ஆக்சைடை முட்டை
ஓட்டின் கண்ணுக்கு தெரியாத நுண்ணிய துளை வழியாக காற்று வெளியேற்றுகிறது.